Posted in

இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங் Lyrics வீடியோ எடிட்டிங்: ChatGPT & Alight Motion பயன்படுத்தி எப்படி உருவாக்குவது ?

ஹலோ Guys  இன்ஸ்டாகிராமில் இப்போது  ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் ஃபேஸ்லெஸ் வெக்டர் போர்ட்ரேட் லிரிக்ஸ் வீடியோ” (Faceless Vector Portrait Lyrics Video) எப்படி எடிட் செய்வது என்றுதான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

பொதுவாக இந்த மாதிரி வீடியோக்களை செய்வதற்கு கொஞ்சம் அதிக கிரியேட்டிவிட்டி தேவைப்படும். ஆனால், இப்போது இருக்கும் AI தொழில்நுட்பத்தை வைத்து மிகவும் எளிமையாக, அதே சமயம் அட்டகாசமான தரத்தில் நம்மால் இதை உருவாக்க முடியும்.

ChatGPT மூலம் இமேஜ் பிராம்ட் (Image Prompt) உருவாக்குவது எப்படி?

முதலில் உங்களுடைய வீடியோவிற்கு தேவையான தனித்துவமான படங்களை (Images) நாம் தயார் செய்ய வேண்டும். இதற்கு நாம் ChatGPT அல்லது வேறு ஏதேனும் ஒரு AI டூலை (Tool) பயன்படுத்தலாம்.

  • நீங்கள் எந்த பாடலுக்கு எடிட் செய்யப் போகிறீர்களோ, அந்த பாடலின் வரிகளை (Lyrics) காப்பி செய்து கொள்ளுங்கள்.
  • ChatGPT-யில் அந்த வரிகளை பேஸ்ட் செய்து, அதற்கு ஏற்றாற்போல் ஒரு Faceless vector portrait Art பிராம்ட்டை ( prompt) எழுதித் தருமாறு கேளுங்கள்.
  • உங்களுக்கு ஏதேனும் முக்கியமான டீடைல்ஸ் வேண்டும் என்றால் (உதாரணமாக: பாய் மற்றும் கேர்ள் கேரக்டர் இருக்க வேண்டும், கேர்ள் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும்) இது ஒவ்வொரு பாடல் ஏற்றவாறு மாறுபடும் அதற்கேற்றவாறு நாம் பிராம்ட்டில் மென்ஷன் செய்ய வேண்டும்.

முக்கியமான டிப்ஸ் (Consistency):அடுத்தடுத்த லிரிக்ஸ்களுக்கு இமேஜ் ஜெனரேட் செய்யும் போது, அதே சாட்டில் (Same Chat) தொடரவும். மேலும், பிராம்ட்டின் இறுதியில் “Use the same boy and girl characters with same clothes” என்று குறிப்பிடுங்கள். அப்போதுதான் வீடியோ முழுக்க கேரக்டர்கள் மாறாமல் ஒரே மாதிரி இருக்கும்.

பேக்ரவுண்ட் ரிமூவிங் & ஐடியாக்கள் (Background Removal & Ideas):

AI மூலம் இமேஜ்களை உருவாக்கிய பிறகு, நமக்கு தேவையான கேரக்டர்களை மட்டும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.

  • 1. ஏதேனும் ஒரு சிறந்த Background Remover இணையதளத்திற்குச் சென்று, நீங்கள் ஜெனரேட் செய்த இமேஜ்களின் பேக்ரவுண்டை ரிமூவ் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். (முக்கியம்: குவாலிட்டி குறையாமல் டவுன்லோட் செய்வது அவசியம்).
  • 2. அடுத்ததாக, பாடலின் சூழலுக்கு ஏற்றவாறு பின்னணிப் படங்களை (Background Images) Pinterest தளத்தில் தேடி டவுன்லோட் செய்யுங்கள்.

> உதாரணமாக: பேருந்து பயணம் போன்ற பாடல் என்றால் “Vector bus background” என்றும், வீட்டிற்குள் நடக்கும் காட்சி என்றால் “Vector room background with switch box” என்றும் தேடினால் இன்னும் கிரியேட்டிவாக இருக்கும்.

Alight Motion App-இல் எடிட்டிங் செய்வது எப்படி?

  • இப்போது பின்னணி மற்றும் கேரக்டர் இமேஜ்கள் தயார். அடுத்து எடிட்டிங் பகுதிக்கு செல்வோம்.ரேஷியோ( Ratio )மற்றும் ஷேப்( Shape) Add செய்தல், Alight Motion ஆப்பை ஓபன் செய்து, இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்கு தேவையான ரேஷியோவை Select செய்து கொள்ளுங்கள். முதலில் ஒரு குறிப்பிட்ட ஷேப்பை (Shape) ஆட் செய்ய வேண்டும். வீடியோவின் இறுதி வரை இந்த ஷேப் தான் பேக்ரவுண்டாக இருக்கும். 
  • பேக்ரவுண்ட் செட்டிங்ஸ்: அந்த ஷேப்பை கிளிக் செய்து, Color and Fill ஆப்ஷனுக்குச் செல்லவும். அதில் உள்ள ‘Star’ (Media) ஆப்ஷனை தேர்வு செய்து, நீங்கள் டவுன்லோட் செய்த பேக்ரவுண்ட் இமேஜை ஆட் செய்தால், அது சரியாக அந்த ஷேப்பிற்குள் பொருந்திவிடும்.
  • கேரக்டர் இமேஜ் அலைன்மென்ட்: Background ரிமூவ் செய்த கேரக்டர் இமேஜை ஆட் செய்து, தேவையான அளவிற்கு சுருக்கியோ அல்லது பெருக்கியோ (Resize) கச்சிதமாக அலைன் செய்து கொள்ளுங்கள்.
  • > டிப்ஸ்: பேக்ரவுண்ட் இமேஜ் ரொம்ப பிரைட்டாக இருந்தால், Lyrics சரியாக தெரியாது. எனவே, பேக்ரவுண்டின் பிரைட்னஸ் ( Brightness ) அல்லது ஒபாசிட்டியை (Opacity) லைட்டாக கம்மி பண்ணிக்கொள்ளுங்கள். உதாரணமாக 100 இல் இருந்து 80 அல்லது 70 ஆக வைக்க வேண்டும்

லிரிக்ஸ் (Lyrics) மற்றும் எஃபெக்ட்ஸ் ஆட் செய்தல்:

  • டெக்ஸ்ட் அலைன்மென்ட்: பாடலின் முதல் வரியை டைப் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமான ஃபான்ட்டை (Font) தேர்வு செய்யவும். (உதாரணமாக: Karmel Medium போன்ற ஸ்டைலிஷ் ஃபான்ட்களை பயன்படுத்தலாம்).
  • விசிபிலிட்டி (Visibility): லிரிக்ஸ் தனியாகவும் அழகாகவும் தெரிவதற்கு Shadow ஆப்ஷனை ஆன் செய்து விடுங்கள்.
  • அனிமேஷன்:இந்த மாடல் வீடியோக்களுக்கு ரொம்ப அதிகமான எஃபெக்ட்ஸ் தேவையில்லை. எளிமையான Fade In & Fade Out எஃபெக்ட் கொடுத்தாலே பார்க்க மிகவும்  அழகாக இருக்கும்.
  • அடுத்தடுத்த வரிகள்:ஒரு இமேஜில் இரண்டு வரிகள் வருகிறது என்றால், இரண்டு வரிகளையும் வெவ்வேறு இடங்களில் (மேலே மற்றும் கீழே) மாற்றி மாற்றி வைப்பது வீடியோவிற்கு ஒரு புது லுக் தரும்.

முடிவுரை:

உங்களுடைய கிரியேட்டிவிட்டியைப் பொறுத்து இந்த வீடியோக்களை இன்னும் பல மடங்கு சுவாரஸ்யமாக மாற்ற முடியும். (உதாரணமாக: AI வீடியோ டூல்கள் மூலம் கண்களை சிமிட்ட வைப்பது, தலைமுடியை அசைய வைப்பது போன்ற அனிமேஷன்களையும் நீங்கள் முயற்சி செய்யலாம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.

.

.

.

.