இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் (Instagram Reels) லிரிக்ஸ் வீடியோக்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இந்த கட்டுரையில் Alight Motion செயலியைப் பயன்படுத்தி, ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் இரட்டை வண்ண (Double Color) லிரிக்ஸ் வீடியோக்களை எப்படி எடிட் செய்வது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஆரம்பக்கட்ட அமைப்புகள் (Project Setup):
- 1. Alight Motion செயலியைத் திறந்து, கீழே உள்ள Plus (+) ஐகானைக் கிளிக் செய்யவும்.
- 2. உங்கள் வீடியோவிற்குத் தேவையான Ratio (விகிதம்), Resolution , Frame Rate, மற்றும் Background Color ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, Create Project என்பதைக் கொடுக்கவும்.
- 3. அதன் பின், நீங்கள் எடிட் செய்ய விரும்பும் பாடலை (Audio) Add செய்யுவும்.
அதன் பின்னர் வீடியோவின் ஆரம்பத்தில் வரும் டெம்ப்ளேட்டை (Template) முதலில் Add செய்து, அதன் நீளத்தைக் கூட்டவோ அல்லது கட் செய்யவோ Alight Motion-ல் உள்ள Timer Icon ஐப் பயன்படுத்தவும்.
லிரிக்ஸ் எடிட்டிங் மற்றும் வண்ணங்கள் சேர்த்தல் (Lyrics & Color Grading):
இதில் இரண்டு வித லிரிக்ஸ்கள் இருக்கும் ஒன்று ஆங்கிலம் மற்றொன்று தமிழ்
1. ஆங்கில லிரிக்ஸ் (English Lyrics):
- Plus (+) ஐகானைக் கிளிக் செய்து Text பகுதிக்குச் செல்லவும்.
- உங்களுக்குத் தேவையான லிரிக்ஸை டைப் செய்து கொள்ளுங்கள். (உதாரணத்திற்கு: Chutti Tech).
- இதற்கு ‘Cattel Trial’ என்ற Font பயன்படுத்தவும். இதன் அளவை (Size) 24 ஆகவும், நிறத்தை (Color) White ஆகவும் மாற்றவும்.
2. இரட்டை வண்ணம் அமைத்தல் (Gradient Effect):
- டெக்ஸ்ட்டிற்கு இருவேறு வண்ணங்களை அமைக்க, Color & Fill ஆப்ஷனுக்குச் செல்லவும்.
- அங்குள்ள பக்கெட் (Bucket) ஐகானுக்கு அருகில் இருக்கும் gradient ஐகானைக் கிளிக் செய்யவும்.
- முதல் நிறமாக வெள்ளை (White) நிறத்தையும், இரண்டாவது நிறமாக உங்களுக்குப் பிடித்த வண்ணம் அல்லது மஞ்சள்/சிகப்பு (Yellow/Red) நிறத்தையும் தேர்ந்தெடுத்து, திரையில் உள்ளவாறு சரியாக அலைன் (Align) செய்து கொள்ளவும்.
- இந்த லிரிக்ஸில் மேலே உள்ள பாதி கலர் வெள்ளை கீழே உள்ள மீதி பாதி வேறொரு நிறம் இருக்கும் அதாவது நாம் இரண்டாவதாக தேர்ந்தெடுத்த நிறம்.
3. தமிழ் லிரிக்ஸ் (Tamil Lyrics):
- முதலில் ஆங்கில வரிகள் இருக்கும் இரண்டாவது தமிழ் வரிகள் இருக்கும்.
- தமிழில் இருக்கும் அமைப்பிற்கு, மீண்டும் ஒரு Text லேயரை உருவாக்கித் தமிழில் டைப் செய்யவும் (உதாரணத்திற்கு: தமிழ்).
- இதற்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய ‘Tamil Font TTF 10’ என்ற ஃபான்ட்டைப் பயன்படுத்தவும்.
- இதன் அளவை (Size) 14 ஆகக் குறைத்து, ஆங்கில லிரிக்ஸிற்கு மேலே சரியாகப் பொருந்துமாறு வைக்கவும்.
அனிமேஷன் மற்றும் எஃபெக்ட்ஸ் (Animation & Effects)
வீடியோவின் ஓட்டம் இயல்பாக இருப்பதற்கு, லிரிக்ஸ் மற்றும் டெம்ப்ளேட்டுகளுக்குச் சரியான எஃபெக்ட்ஸ்களைக் கொடுக்க வேண்டும்.
1. ஓவர்லே டெம்ப்ளேட் (Overlay Template):
கூடுதலாக ஒரு டெம்ப்ளேட் சேர்த்து அதை ஆட் செய்து கொள்ளவும் பிறகு Blending & Opacity -> Lighten -> Screen என்று மாற்றவும்.
2. தமிழ் லிரிக்ஸ் எஃபெக்ட் (Fade Out):
- தமிழ் லிரிக்ஸ் லேயரைக் கிளிக் செய்து Effects -> Add Effect -> Opacity & Visibility பகுதிக்குச் செல்லவும்.
- அங்கு Fade In / Fade Out எஃபெக்ட்டைத் தேர்ந்தெடுத்து, அதில் Out மதிப்பை மட்டும் குறைத்து, In மதிப்பை அப்படியே வைக்கவும்.
- லிரிக்ஸ் துல்லியமாகத் தோன்றுவதற்கு, இரண்டாவது லிரிக்ஸ் தொடங்குவதற்குச் சற்று முன்பாகவே (Timeline-ல்) அந்த லேயரை நீட்டித்துக் கொள்ளவும் (Expand).
3. ஆங்கில லிரிக்ஸ் எஃபெக்ட் (Wipe Effect):
- ஆங்கில லிரிக்ஸ் லேயருக்கு ‘Wipe’ எஃபெக்ட்டைச் சேர்க்கவும்.
- எஃபெக்ட்டின் உள்ளே சென்று, Start மற்றும் End என்று இருக்கும் அதில் End கிளிக் செய்து லிரிக்ஸின் ஆரம்பத்தில் ஒரு Animation Key-யும், முடிவடைவதற்கு சற்று முன்பாக ஒரு Animation Key-யும் வைக்கவும்.
- முதல் கீயின் (First Key) மதிப்பை பூஜ்ஜியமாக (0) குறைக்கவும். Angle மதிப்பை 8 ஆகவும், Feather மதிப்பை 8 ஆகவும் மாற்றவும்.
- லிரிக்ஸ் தொடங்கும் போது சரியாக இருக்க, Start மதிப்பை -20 என்ற அளவில் வைக்கவும்.
XML ஃபைல் (XML File) மற்றும் ஒரு வேண்டுகோள்:
இந்த எடிட்டிங்கிற்கான முழு XML File இரண்டு நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு வழங்கப்படும். அதற்கு முன்பாக, நீங்களாகவே இந்த எஃபெக்ட்களைச் செய்து பழகினால், அடுத்தடுத்த வீடியோக்களை எடிட் செய்யும்போது உங்களுக்கு ஒரு தெளிவான ஐடியா கிடைக்கும்.